Tuesday, April 10, 2007

328. பங்களாதேஷ்-தென்னாபிரிக்கா போட்டி - ஓர் அலசல்



எனது முந்தைய பதிவில் இந்த போட்டி குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியிருந்தேன்:
*****************
இதுவும் ஒரு பிரமாதமான ஆட்டம்! Providence ஸ்டேடியத்தில், providence அன்று பங்களாதேஷ் பக்கம் இருந்தது :)

ஸ்மித் டாஸில் வென்று, நல்ல பேட்டிங் பிட்ச் என்று அனுமானித்து, பங்களாவை பேட் செய்ய அழைத்தார். அதற்குக் காரணம், தென்னாபிரிக்காவின் அப்போதிருந்த negative நெட் ரன் ரேட் ! பங்களாவை குறைந்த ரன்களில் சுருட்டி விட்டு, இலக்கை குறைந்த ஓவர்களில் எட்டி, NRR-ஐ அதிகப்படுத்த வேண்டும் என்ற ஸ்மித்தின் நினைப்பில் மண் விழுந்தது!

பங்களா 251 ரன்கள் எடுத்து, NRR-ஐ கூட்டுவது என்ன, வெல்வதே கடினம் என்ற நிலைக்கு தென்னாபிரிக்காவைத் தள்ளியது :) முந்தைய 2 மேட்ச்களில் படுதோல்வியை சந்தித்த பங்களா அன்று வெற்றி வெறியுடனும், உத்வேகத்துடனும் விளையாடியது.

முதல் 25 ஓவர்களில் சற்றுத் தடுமாறி 92-4 என்ற நிலையில் இருந்த பங்களா, அஷ்ராஷபுலின் 87 ரன்களின் (83 பந்துகள்) பலத்திலும், அஷப்டாப் மற்றும் மொர்டாஸாவின் அதிரடி ஆட்டத்தின் பயனாலும், அடுத்த 25 ஓவர்களில் 159 ரன்களை குவித்தது. கடைசி பத்து ஓவர்களில் மட்டும் 80 ரன்கள். நெல், போலாக் தவிர மற்ற பந்து வீச்சாளர்கள் துவைக்கப்பட்டனர் !

தென்னாபிரிக்கா 48.4 ஓவர்களில், 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பங்களாதேஷதக்கு மற்றுமொரு முறை Giant killer பட்டம் வழங்க வழி செய்தது :) தென்னாபிரிக்கா செமி ஷபைனலுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் வந்து விட்டது எனக்கு :( இந்த ஆட்டம் குறித்து விரிவாக பின்னர் எழுத உத்தேசம்.

***********************
அந்த உத்தேசத்தைத் தொடர்ந்து, விரிவான பதிவு இங்கே :)

அன்றைய பங்களாதேஷ் பேட்டிங்கில், 4 ஆட்டக்காரர்களை குறிப்பிட்டு ஆக வேண்டும்.

முதலில், தமீம் இக்பால், இளம் வீரரான இவர், பொறுமையாக ஆடி, 38 ரன்கள் எடுத்ததே, அவர் பின் வந்த பேட்ஸ்மன்களுக்கு, தைரியமாகவும், உத்வேகத்துடனும் விளையாட தளம் அமைத்துக் கொடுத்தது என்று கூறுவேன். 20வது ஓவரில் அவர் அவுட் ஆனபோது ஸ்கோர், 69-3, என்னளவில், இது 10 ஓவர்களில், 60-5 என்ற ஸ்கோரை விட எவ்வளவோ மேல், இல்லையா ?
Photo Sharing and Video Hosting at Photobucket
அடுத்து, சுறுசுறுப்பாக ஆடிய அ·ப்டாபும் (35 of 43 balls), இறுதி வரை ஆடிய அஷ்ர·புலும் (87 of 83 balls) ஜோடி சேர்ந்து 84-4 என்ற நிலையிலிருந்து ஸ்கோரை 160 வரை எடுத்துச் சென்றனர். அதாவது, 14 ஒவர்களில், 76 ரன்கள் எடுத்தபோதே, ஆட்டம் தென்னாபிரிக்காவின் பிடியிலிருந்து நழுவத் தொடங்கியது என்பது என் அனுமானம். இன்னிங்க்ஸின் கடைசி கட்டத்தில், அஷ்ர·புல் மூன்று ஸ்டம்புகளையும் விட்டு off-side பக்கம் நகர்ந்து அடித்த 2 பவுண்டரிகள் அருமையிலும் அருமை, Improvisation at its very best என்று கூறலாம்.

அடுத்து, அஷ்ர·புலுக்கும், மொர்டாஸாவுக்கும் இடையாயான 54 ரன்கள் (5.1 ஓவர்களில்!) பார்ட்னர்ஷிப் குறிப்பிடத்தக்கது. மொர்டாஸா 16 பந்துகளில் 25 ரன்கள் (3 fours, 1 six) எடுத்தார். குறிப்பாக, மக்கயா நிதினியையும் (இவர் பந்தில் ஒரு straight sixer அடித்தார்!), லாங்கவெல்ட்டையும், இருவரும் 'பெண்டு' நிமிர்த்தியது கண்கொள்ளா காட்சி!

தென்னாபிரிக்கா தரப்பில், ஆண்ட்ரு நெல் (5-45) சிறப்பாக பந்து வீசினார். முதல் 3 விக்கெட்டுகளையும் இவரே வீழ்த்தி, பங்களாவை சற்று தடுமாற வைத்தார். போலாக்கும் (விக்கெட் எதுவும் எடுக்காவிட்டாலும்) எகானமிகலாக பந்து வீசினார். தென்னாபிரிக்கா ·பீல்டிங் எப்போதும் போல சிறப்பாகவே இருந்தது.

பங்களா எடுத்த ஸ்கோரான 251-8 என்பது, பங்களாவுக்கு உலகக் கோப்பை ரெகார்ட் ஸ்கோர் என்பது குறிப்பிடவேண்டியது.

தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா செய்ததை Harakiri என்றே கூற வேண்டும். நிதானம் துளியும் இல்லாமல், பங்களாவை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற திமிரில், அவரவர் தமது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இது ஒரு பொறுமையற்ற அணுகுமுறை. 251 என்பது துரத்த முடியாத ஸ்கோர் அல்ல, களமும் சற்று சிறியதே! தென்னாப்பிரிகா பேட்டிங்கில் வலு மிக்கது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வர்.

தெ.ஆ தனது 6வது ஓவரிலேயே (18-1), கேப்டன் ஸ்மித்தை இழந்தது. ஸ்கோர் அறுபதுகளில் இருந்தபோது, ஓரளவு நன்றாக ஆடிக் கொண்டிருந்த ஜாக் காலிஸையும், டிவிலியர்ஸையும், பிரின்ஸையும் (அனாவசிய ரன் அவுட்) தொடர்ச்சியாக இழந்ததில்ஸ்கோர், 67-4, பங்களா லேசாக ரத்த வாடையை முகர்ந்தது :)
Photo Sharing and Video Hosting at Photobucket Photo Sharing and Video Hosting at Photobucket
பந்து வீச்சும் சுறுசுறுப்பானது. ரஸாக், ர·பீக், என்று 2 இடக்கை சுழற்பந்து வீச்சாளர்களும், tight line and Length-இல் பந்து வீசத் தொடங்கினர். அடுத்த 7 ஓவர்களில், 20 ரன்களே எடுக்க முடிந்தது! ஒரு ஸிக்ஸர் அடித்த பவுச்சர், அடுத்த பந்தில் அவுட், 87-5, அடுத்து ஜஸ்டின் கெம்ப் caught and bowled, 87-6, இந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி, பங்களாவை வெற்றிப் பாதைக்கு விரைவாக இட்டுச் சென்றவர் சகிபுல் ஹஸன் (இவர் part-time left arm spinner!). முக்கியமான ஒரு விஷயம், பங்களா வீரர்களின் ஆவரேஜ் வயது 23 என்பது :)

இதற்கு மேல் ஆட்டம் பற்றி சொல்ல பெரிதாக எதுவுமில்லை, கிப்ஸ் (56 ரன்கள்) மட்டும் இறுதி வரை விக்கெட் இழக்காமல் இருந்ததில், தெ.ஆ. 48.4 ஓவர்களில் 184-க்கு ஆல் அவுட், பங்களாவுக்கு ஒரு மகத்தான ஒரு வெற்றி, இது பங்களாதேஷின் 5-வது உலகக்கோப்பை வெற்றி, முந்தைய நான்கை விட அதிகப் பிரகாசமான வெற்றியும் கூட!!! அடுத்து, பங்களா அயர்லாந்தையும், இங்கிலாந்தையும், வெஸ்ட் இண்டீஸையும் வீழ்த்தினால் (though it is quite a Long shot!),செமி·பைனல் சுற்றுக்குச் செல்லக் கூட வாய்ப்பிருக்கிறது.
Photo Sharing and Video Hosting at Photobucket
அடுத்த நாள் பங்களா செய்தித் தாள்களில், "புலிகள் மறுபடி உறுமத் தொடங்கின" "உலகின் நம்பர் 1 அணியை பங்களா வீழ்த்தியது" போன்ற தலைப்புச் செய்திகளை காண முடிந்தது!!!!

எனது முந்தைய பதிவில் ஓர் அனானி நண்பர் என்னை ஒரு "உடு உட்டிருந்தார்":
*********************
Anonymous said...
Dear Mr.Bala

"""அயர்லாந்து பாக் அணியை வீழ்த்தியதும், பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தியதும் என்னளவில், Aberrations மட்டுமே ! """
""""பங்களாதேஷ் அணி, இந்தியாவில் உள்ள ஒரு நல்ல ரஞ்சி அணியுடன் (மும்பை, மேற்கு வங்கம் ... ) ஒப்பிடத்தக்கது, அவ்வளவே!""""

இதை சொன்ன நீங்களே இப்போது பின்வருமாறு சொல்லி ஸ்மைலியெல்லாம் போட்டாலும் ஒத்துக் கொள்ள முடியாது.

"""தென்னாபிரிக்கா 48.4 ஓவர்களில், 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, பங்களாதேஷதக்கு மற்றுமொரு முறை Giant killer பட்டம் வழங்க வழி செய்தது :) """"

Clearly you have erred in your judgement.Accept it.Bangladesh is playing better cricket that you are assuming or projecting.
******************
அனானி இப்படிக் கேட்பதில் தவறில்லை தான். சற்று கடுப்பில் தான் நான் எழுதியிருந்தாலும், நான் கூறியது தவறு என்று ஒப்புக் கொள்ள, பங்களாதேஷ் அடுத்து ஆடவுள்ள இரண்டு ஆட்டங்களில் (இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ¤க்கு எதிராக) ஒரு ஆட்டத்திலாவது வெற்றி பெற வேண்டும், பார்க்கலாம் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 328 ***

3 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment !

said...

Good analysis ...

said...

//
இதுவும் ஒரு பிரமாதமான ஆட்டம்! Providence ஸ்டேடியத்தில், providence அன்று பங்களாதேஷ் பக்கம் இருந்தது :)
//
:))))

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails